திருப்புவனத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி திமுகவினர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர் 
தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: மானாமதுரை, திருப்புவனத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி  பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

DIN

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி  பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

திருப்புவனத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு திருப்புவனம் பேரூராட்சி தலைவரும் திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சேங்கைமாறன் தலைமையில்  திமுகவினர் மெளன ஊர்வலம் நடத்தினர். அதன் பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து சேங்கைமாறன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர செயலாளர் நாகூர்கனி , மீனவரணி அண்ணாமலை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மானாமதுரையில் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து நகரின் அனைத்து பகுதிகளிலும் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

வைகை ஆற்று பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்தனர். மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, நகராட்சி துணைத் தலைவர் பாலசுந்தரம், வார்டு உறுப்பினர்கள் இந்துமதி திருமுருகன், சோம. சதீஷ்குமார், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, ஒன்றிய துணைத் தலைவர் முத்துசாமி, நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டனர். இளையான்குடி ஒன்றியத்தில் அண்டக்குடி, தாயமங்கலம் பெரும்பச்சேரி, மாதவநகர், கோட்டையூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுப. மதியரசன் நகரச் செயலாளர்  நஜூமுதீன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தமிழரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT