தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை(ஆகஸ்ட் 12) மாலை வரை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புகளுக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவகாசம் அளித்துள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்ட நிலையில் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்தி வைத்துள்ளார்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினார் வைரமுத்து தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று  (ஆக. 10) விசாரணைக்கு வந்தது. 

நேற்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குரைஞர் விஜயநாராயணனும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குருகிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை 2-வது நாளாக இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் 2 நாள்களாக கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
 

இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்க்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT