முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று சந்தித்தார்.  

Updated On : 12 ஆகஸ்ட், 2022 at 4:36 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

முதல்வர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று சந்தித்தார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் ஆகியோர் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25ஆவது மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு தோழர் ஜீவாவுக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

மேலும் நல்லக்கண்ணுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது” அறிவித்தமைக்காகவும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழாண்டுக்கான தமிழக அரசின் ‘தகைசால் தமிழா்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு தோ்ந்தெடுக்கப்பட்டு அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்கு சுதந்திர தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.