முகப்பு
தமிழ்நாடு

அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட விருப்பம் இல்லை: அப்பாவு

அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட விருப்பம் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:05 AM
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
பகிர்:

சென்னை: அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட விருப்பம் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக இபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது:

அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை அரசியல் ஆக்க விரும்பவில்லை. இப்பிரச்னை பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல. சட்டமன்ற அதிமுக துணைத்தலைவர் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரே கூறியுள்ளார்.

சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு. அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட விருப்பம் இல்லை. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கடிதங்கள் குறித்து, யார் மீதும் விருப்பு, வெறுப்பில்லாமல் ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →