வருமானவரித் துறை 
தமிழ்நாடு

தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை முடிவு

ராணிப்பேட்டை தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை முடிவுபெற்றது.

DIN

சென்னை: ராணிப்பேட்டை தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை முடிவுபெற்றது.

தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் 4 நாள்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

ராணிப்பேட்டை தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு பிரபல தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ராணிப்பேட்டை, சிப்காட், மேல்விஷாரம், பெருமுகை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனத்தின் உரிமையாளர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வரும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமாக ஆம்பூர், சென்னை, புதுச்சேரி, வேலூர், ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள்,வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை சோதனை மேற்கொண்டது.

சென்னையில், நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச் சாலையில் உள்ள அலுவலகம், பெரியமேடு பகுதியில் உள்ள தொழிற்சாலை என பல்வேறு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில்  4 நாள்கள் நடைபெற்ற சோதனை முடிவு பெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT