முகப்பு
தமிழ்நாடு

ஆந்திர தடுப்பணையை தாண்டி தமிழகம் வரும் பாலாற்று வெள்ள நீர்

வாணியம்பாடி அருகே தொடர் மழை காரணமாக பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டு இருக்கின்றது.

Updated On : 28 ஆகஸ்ட், 2022 at 11:59 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே தொடர் மழை காரணமாக பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டு இருக்கின்றது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு கட்டியுள்ள 12 அடி உயர தடுப்பணையை கடந்து தமிழக பகுதியில் வெள்ளம் பாய்கிறது. கடந்த நான்கு தினங்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து மழை காரணமாக ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணியை கடந்து  தமிழக பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த வெள்ளமானது அம்பலூர் தரைப்பாளத்தை கடந்து கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.