கோப்புப் படம் 
தமிழ்நாடு

திருவாரூர், பெரம்பலூர், தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

'மாண்டஸ்' புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

'மாண்டஸ்' புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. 

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

கரையைக் கடக்கும் மாண்டஸ்:

மாண்டஸ் புயல் நாளை (டிச.9) இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காரைக்காலிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதனால், பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

கிராம உதவியாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிா்த்து வைகோ வழக்கு: விசாரணை பிப்.16-க்கு ஒத்திவைப்பு

ஆலங்குளத்தில் வீடு, காய்கறி சந்தையில் தீ விபத்து

பொன்னேரி நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT