தமிழ்நாடு

அமைச்சரின் கூட்டத்துக்கு வராத அறநிலையத்துறை அதிகாரிகள்!    

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒலிபெருக்கியில் அழைத்தும் அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.  

DIN

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒலிபெருக்கியில் அழைத்தும் அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.  

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம்  செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொருவராக வந்து கோரிக்கை மனுக்களை வழங்கிய போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறநிலைத்துறை அதிகாரிகள் வருமாறு  ஒலிபெருக்கியில் அழைத்தார். 

அமைச்சரும், ஆட்சியரும் பலமுறை ஒலிபெருக்கியில் அழைத்தும் அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை. பின்னர் பிற கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டு அமைச்சர் தெரிந்து கொண்டார். 

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க கூட்டம் கூட்டமாக வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். பெறப்படும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு அவை மூன்று நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசினார். 

இதேபோல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை 3 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT