முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு: ஒருவர் கைது!

மேற்கு தில்லியின் உத்தம் நகரில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
கோப்புப்படம்
பகிர்:

மேற்கு தில்லியின் உத்தம் நகரில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியின் துவரகா பகுதியில் தனது தங்கையுடன் காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலையில்  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சிறுமி முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர். 

துடிதுடித்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் படுகாயத்துடன் சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவத்தின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் சிறுமி மீது ஆசிட் வீசியது தெரியவந்தது. 

இதையடுத்து, ஆசிட் வீசிய ஒருவரை காவல்துறையினர் கைது செத்துள்ளனர், மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →