தமிழ்நாடு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கத் தடை

DIN

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் துறைமுகங்களில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும்வரை தென்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள் கிழமை (டிச.19) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT