தமிழ்நாடு

பழநி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது!

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை திங்கள்கிழமை (டிச.19) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

DIN



திண்டுக்கல்: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை திங்கள்கிழமை (டிச.19) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோயிலில் முருகப் பெருமான் ஆண்டி கோலத்தில் காட்சியளிக்கிறார். 

இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ரோப் கார் சேவை ராக்கால பூஜை வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழை காரணமாக ரோப் காப் சேவை தடைப்படும். 

இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை திங்கள்கிழமை (டிச.19) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT