சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு ஜாமீன்
யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முன்னதாக இவ்வழக்கில் நாஞ்சில் விஜயன் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் நாஞ்சில் விஜயன். இவர் சீரியல்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் தொடர்பான சர்ச்சையில், சூர்யா தேவிக்கும், நாஞ்சில் விஜயனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதையும் படிக்க- சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சிக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்
Advertisement
இதில் நாஞ்சில் விஜயன் வீட்டுக்கு சூர்யா தேவி சென்றபோது, அவரை நாஞ்சில் விஜயன் தாக்கியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா தேவி புகார் அளித்தார். புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறையினர் நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். விசாரணைக்கு நாஞ்சில் விஜயன் ஆஜராகாமலும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்த வழக்கில் நாஞ்சில் விஜயன் கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.