முகப்பு
தமிழ்நாடு

மன்னார்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பு!

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆர்நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை மாலை அணிவித்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை மாலை அணிவித்தனர்.

அதிமுகவின் சார்பில், மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள பெரியார் சிலையிலிருந்து முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து தெற்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில், கட்சியின் மாநில அமைப்பு செயலர் சிவா.ராஜமாணிக்கம், நகரச் செயலர் ஆர்.ஜி.குமார், ஒன்றியச்செயலர் தமிழ்ச்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவர் டி.மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் பொன்.வாசுகிராம், மகளிரணி மாவட்டத் தலைவர் டி.சுதா, நகர அவைத் தலைவர் த.வரலெட்சுமி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகி அ.புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →