தமிழ்நாடு

இளைஞரைக் கடித்த கண்ணாடி விரியன்! பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டுவந்த உறவினர்

DIN

சீர்காழியில் வலையில் சிக்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு, இரண்டு முறை கடித்ததால் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருடன் கடித்த கண்ணாடி விரியன் பாம்பினையும் அடித்து மருத்துவமனைக்கு கொண்டு உறவினர்கள் கொண்டுவந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (22). இவர் இன்று காலை தனது வீட்டின் பின் பகுதியில்  இருந்த செடி, கொடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வலையில் கண்ணாடி விரியன் பாம்பு சிக்கி இருந்ததை அறியாமல் அப்பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்த விமல்ராஜை பாம்பு கடித்தது.

ஆனால், விமல் ராஜ் முள்ளு குத்துவதாக மீண்டும் அந்த பகுதியில் கையை விட்டு  சுத்தம் செய்துள்ளார். மீண்டும் பாம்பு கடித்துள்ளது.  பின்னரே கண்ணாடி விரியன் பாம்பு கடித்ததை அறிந்த விமல்ராஜ் மயக்கமடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் விமல்ராஜை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அதோடு விமல்ராஜை கடித்த கண்ணாடி விரியன் பாம்பினையும் அடித்து அங்கிருந்த வலையுடன் ஒரு பையில் போட்டுக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் வந்தனர்.

தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் பாம்பு கடித்த விமல் ராஜுக்கு தீவிர சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கடித்த பாம்புடன் வந்த உறவினர்களை கண்ட மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT