மதுரையில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை செல்லூர் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: சபரிமலையில் 36 நாள்களில் 26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் செல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.