ஆர்.என். ரவி 
தமிழ்நாடு

நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என் ரவி.

DIN

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என் ரவி.

தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியிறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின் அந்த மசோதா ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என் ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

அதற்கான காரணங்களை கடந்த பிப்.1 ஆம் தேதி தமிழக அரசிற்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் ‘சமூக நீதிக் கண்ணோட்டத்தில்  பார்த்தால் நீட் தேர்வு விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட முன்வரைவு ஏழைகள் மற்றும் ஊரக மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT