முகப்பு
எடப்பாடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலான மின்சாதனப் பொருள்கள்
தமிழ்நாடு

எடப்பாடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் சேதம்

எடப்பாடி அருகே மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில், இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
எடப்பாடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலான மின்சாதனப் பொருள்கள்
பகிர்:

எடப்பாடி: எடப்பாடி அருகே மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில், இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட எட்டிகுட்டை மேடு பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் (50). அப்பகுதியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வெள்ளியன்று அதிகாலை சபரிநாதன் தனது கடையின் பின்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டு எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.

தீயணைப்புத் துறையினர் நிகழ்வு இடத்திற்கு வருவதற்கு உள்ளாக கடையின் அனைத்துப் பகுதிகளும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் கடைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்து குறித்து எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ராமன், ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்மந்தப்பட்ட கடையின் உரிமையாளர் சபரிநாதன் இந்த தீ விபத்து குறித்து தனது உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கொங்கணாபுரம் போலீஸார் நிகழ்வு இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →