மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

மாநில உரிமைகளை அடகு வைத்தவர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

DIN

மாநில உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது, மதுரை மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அப்பாவி மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.

அதிமுகவினருக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் தெரியாது. அவர்களுக்கு அமாவாசை அரசியல்தான் தெரியும். அரசியல் அமாவாசைகள் யாரென்று தெரிந்துதான் மக்கள் தற்போது அதிமுகவினரை புலம்பவிட்டுள்ளார்கள் என்று விமர்சித்தார்.

மிசாவையே பார்த்த என்னை மிரட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், பழனிசாமியின் பொறுப்பற்ற ஆணவப்பேச்சுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT