தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,325 பேருக்கு கரோனா; சென்னையில் 303

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,325 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர்.

தமிழக்த்தில் நேற்று 1,634 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று 85,969 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், புதிதாக 1,325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,39,221-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 37,946-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 5,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை  33,69,907-ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மொத்தமாக 6,34,77,508 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 303 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,47,494ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT