தமிழ்நாடு

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது சிபிஐ

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

DIN


தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இயற்கைக்கு மாறான மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமானூா் அருகேயுள்ள கண்டியநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மு. லாவண்யா தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டி தூய இருதய பெண்கள் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தபோது, அந்த விடுதிக் காப்பாளரான சகாயமேரி கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கோரி லாவண்யாவைக் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகப் புகாா் எழுந்தது.

இந்த விவகாரத்தில் விடுதிக் காப்பாளா் சகாயமேரி மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தது. 

இதனிடையே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கடந்த 31ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனிடையே, மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

எனினும் தஞ்சை மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கினர். இயற்கைக்கு மாறான மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT