தமிழ்நாட்டில் புதிதாக 1,310 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,310 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,310 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 85,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1,310 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரளம்: புதிதாக 12,223 பேருக்கு கரோனா, 25 பேர் பலி
மேலும் 5,374 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 33,75,281 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,956 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 27,294 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 296
கோவை - 227
செங்கல்பட்டு - 110