நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநகராட்சிகளில் 5.78%, நகராட்சிகளில் 10.32%, பேரூராட்சிகளில் 11.74% வாக்குகள் பதிவாகின. 6 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. சென்னையில் மந்தமாக நடைபெற்ற வாக்குப்பதிவு இனிமேல் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். 30 முதல் 40 மின்னணு இயந்திரங்கள் வரை பழுதடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மாலை 5 மணிக்குள் வந்திருந்து காந்திருந்தால் அவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
கோவையில் பிரச்னைகள் பெரிதாக எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மின்னணு இயந்திரங்களால் தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்கும திட்டமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.