முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி கொங்கணாபுரம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

எடப்பாடி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர செயலாளர் ஏ.எம். முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். 

தொடர்ந்து நகர அதிமுக சார்பில் ஏழை, எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.ராமன், நகர மன்ற உறுப்பினர்கள் நாராயணன், ராம்குமார் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அதேபோல் கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர்மணி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு அதிமுகவினர் இனிப்புகளை வழங்கி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.

முழு கட்டுரையைப் படிக்க →