விளாதிமீா் புதின் 
தமிழ்நாடு

உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் புதின்!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று புதின் கூறியுள்ளார். 

DIN


உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு அதிபர் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று புதின் கூறியுள்ளார். 

புதின் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியிருப்பதாவது: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்று புதின் கூறியுள்ளார். 

மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள புடின், ரஷிய நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்கள் பலி மற்றும் ரத்தக்களரிகளுக்கு 'உக்ரைன் ஆட்சியாளர்களே' பொறுப்பு என்று புதின் கூறியுள்ளார். 

ரஷிய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாட்டின் முயற்சியும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" ஏற்படுத்தும் என்று புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க புதின் உத்தரவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுள் துகள்... சரண்யா ஷெட்டி!

ஓணம் சீசன்... ரவீனா தாஹா!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

SCROLL FOR NEXT