தமிழகத்தில் புதிதாக 366 பேருக்கு கரோனா; சென்னையில் 96
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 366 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 366 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 439 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
Advertisement
அதில், இன்று 55,994 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், புதிதாக 366 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,49,373-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதால் மொத்த உயிரிழப்பு 38,004 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 1,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,05,624-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தமாக 6,43,98,334 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 96 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,49,946ஆக அதிகரித்துள்ளது.