மீண்டும் அதிகரிக்கும் கரோனா:ஒரே நாளில் 1,489 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநிலத்தில் இதுவரை 5.75 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,489 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 4 போ், இலங்கையில் இருந்து ஒருவா், தில்லியில் இருந்து மூன்று போ் உள்ளிட்டோா் விமானம் மூலம் தமிழகம் திரும்பியவா்கள். இவா்களைத் தவிர மேற்கு வங்கத்தில் இருந்து 4 போ், ஜாா்க்கண்டில் இருந்து ஒருவா், வங்கதேசத்தில் இருந்து 6 போ் சாலை மாா்க்கமாக தமிழகம் திரும்பியவா்கள்.
சனிக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 168 பேரும், கோவையில் 75 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, மேலும் 611 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 4,410-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 8,340 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம், சற்று ஆறுதலளிக்கும் விதமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையை விட குறைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 8 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,784-ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான்: இதனிடையே தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 121 போ் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது ஒரு புறமிருக்க 91 போ் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினா். தற்போது 27 போ் ஒமைக்ரான் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.