தடுப்பூசி முகாமில் மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் 
தமிழ்நாடு

ஜன. 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி: மா.சுப்பிரமணியன்

ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

DIN

ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10-ஆம் தேதி முறையாக தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார். 

டெல்டா வகை போன்று தற்போது ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருவதால், முகக்கவசம் அணவது, தடுப்பூசி போடுவது மட்டுமே இந்த பேரிடரில் இருந்து மீள ஒரே வழி எனத் தெரிவித்தார்.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். கரோனாவில் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. சென்னையில் இடவசதியுள்ள கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒமைக்ரான் பரவிய பலருக்கும் குறைந்த பாதிப்போடு இருப்பதால் சிகிக்சை முறை மாற்றி அமைக்கப்படும். ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கத்தில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களின் இயல்பாக சுற்றுலா மாறிவிட்டது! சுமன் பில்லா

அதிர்ச்சியா! ஆறுதலா? இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!!

வார பலன்கள்: மேஷம் - மீனம்!

பொறியியல் கல்வி! எக்காலத்துக்கும் ஏற்றது இயந்திரவியல்!!

மத்திய பட்ஜெட் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்!

SCROLL FOR NEXT