முகப்பு
தமிழ்நாடு

கனமழையால் சாலைகள் சேதம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்ததாலும், சுரங்கங்களில் தண்ணீர் தேங்குவதாலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2022 at 4:16 PM
கனமழையால் சாலைகள் சேதம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பகிர்:

சென்னையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்ததாலும், சுரங்கங்களில் தண்ணீர் தேங்குவதாலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்த தகவலை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. 

மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்:

மெட்லி சுரங்கப்பாதை
ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை

வாகனங்கள் மெதுவாக அனுமதிக்கப்பட்டுள்ள சாலைகள்:

திருமலைபிள்ளை சாலை
பசூல்லா சாலை

மாநகரப் பேருந்து போக்குவரத்து மாற்றம்:

வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக
திருப்பிவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கபாதை மற்றும்
சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்ப்செட்கள் மூலம் வெளியேற்றும்
பணி நடைபெற்றுவருகிறது.

வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர்
தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல்
சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.