கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழ் பயிற்றுமொழி: பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் விலக்கு

தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம்  தெரிவித்துள்ளது. 

DIN

தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம்  தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை நாளை முதல் செலுத்தவும், தேர்வுக் கட்டணத்தை வசூலித்து வருகிற 20 ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள், ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

செய்முறைத் தாள் கொண்ட தேர்வுகளுக்கு ரூ. 225 எனவும் செய்முறை அல்லாத தேர்வுகளுக்கு ரூ. 175 கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கண்பார்வை அற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அரசுப்பள்ளிகளில் பயிலும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT