தமிழ்நாடு

சிறுவன் உயிரிழந்த சம்பவம்: புலனாய்வுக்காக 48 துப்பாக்கிகளும் பறிமுதல்

DIN

புதுக்கோட்டையில் குண்டு பாய்ந்து சிறுவன் பலியான வழக்கில் 48 துப்பாக்கிகளை புலனாய்விற்காக பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை பசுமலைப்பட்டி காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தின் அருகே வீட்டிலிருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் குண்டு பாய்ந்து இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அன்றைய நாளில் (டிச. 30) பயிற்சித் தளத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 34 பேர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 14 பேர் மீது கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இவர்கள் பயன்படுத்திய இன்சாஸ் மற்றும் ஏகே 303 வகை துப்பாக்கிகளை கீரனூர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவையனைத்தும் சென்னையிலுள்ள தடய அறிவியல் பிரிவுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஏற்கெனவே புகழேந்தியின் தலையில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு, தடய அறிவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT