தமிழ்நாடு

சென்னை வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு: முதல்வர்

DIN

சென்னை வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்து வருகிறார்.

இதில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பல புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். 

அந்தவகையில், சென்னை வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்யவும், மீண்டும் பாதிப்பைத் தடுக்கவும் நிதி ஒதுக்கப்படும் என்றார். 

அதுபோல, 1.62 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT