தமிழ்நாடு

கரும்பு உற்பத்தி விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி ஊக்கத்தொகை: ஸ்டாலின் வழங்கினார்

DIN

சென்னை: சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய தகுதியுடைய விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு மேல் கூடுதலாகத் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி நிதி நிலை அறிக்கை 2021-2022 அறிவிப்பின்படி, கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.42.50 சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 என மொத்தம் ரூ.192.50 தமிழக அரசால், மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,707.50-ஐ விட டன் ஒன்றிற்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்படி 2020-21ஆம் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.2,900 கிடைக்கப் பெறுகிறது.

அதன்படி, தமிழக அரசால், 2020-2021 அரவைப் பருவத்தில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 17 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 78 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய தகுதியுடைய 91 ஆயிரத்து 120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக, மொத்தம் ரூ.150 கோடியே 89 லட்சம் வழங்கும் பணியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை (ஜன.8) தலைமைச் செயலகத்தில் 5 கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர். சர்க்கரைத் துறை ஆணையர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர், வேளாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

உன்னைப் போல யாருமில்லை! கெடிகா சர்மா..

வைரலாகும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள்!

ஷாலு.. சஞ்சிதா ஷெட்டி!

ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்!

SCROLL FOR NEXT