முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டதால் மின்சார உற்பத்தி நிறுத்தம். 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் இல்லை: மின்சார உற்பத்தி நிறுத்தம்

முல்லைப் பெரியாற்றிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் வெளியேற்றம் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டதால், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத

DIN


கம்பம்: முல்லைப் பெரியாற்றிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் வெளியேற்றம் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டதால், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 137.45 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 152 அடி),  நீர் இருப்பு 6,483 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு, 160 கன அடியாகவும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதனால் புதன்கிழமை வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்பட்டதால், லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி 3 மின்னாக்கிகள் மூலம் தலா 42 என மொத்தம், 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

அதேநேரத்தில்  வியாழக்கிழமை தண்ணீர் நிறுத்தப்பட்டதால் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டது, இரைச்சல் பாலத்தில் 65 கனஅடி தண்ணீர் மட்டும் குடிநீர் விநியோகத்திற்காக திறந்துவிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT