முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை: பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுக்கோட்டை அருகில் உள்ள கடையக்குடி  ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோயிலில்  சொர்க்கவாசல் வியாழக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:07 AM
பிரசன்ன ரெகுநாத பெருமாள்
பகிர்:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுக்கோட்டை அருகில் உள்ள கடையக்குடி  ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோயிலில்  சொர்க்கவாசல் வியாழக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.

மூலவர்  பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. 

உற்சவர்  ஸ்ரீ ராமர், சீதாதேவி, இளையபெருமாள், லெஷ்மணர்  ஆகியோர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

பின்னர் உற்சவர் ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பரமபதவாசலைக் கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பட்டாச்சாரியார்கள் ஆராஅமுதன், பார்த்தசாரதி ஆகியோர்  பூஜைகளை  சிறப்புடன் கவனித்தனர். 

பல்வேறு பிரமுகர்கள், சுற்றுவட்டராத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகைதந்து வழிபட்டனர்.  அனைவருக்கும்  பிரசாதம்  வழங்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →