முகப்பு
தமிழ்நாடு

தை பொங்கல் திருநாள்: மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர்

தை பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் வி.பி.எம்.எஸ் நகரில் மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர்.
பகிர்:

வெள்ளக்கோவில்: தை பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் வி.பி.எம்.எஸ் நகரில் மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வி.பி.எம்.எஸ் நகரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் அடைக்கப்படுகின்றன. 

வி.பி.எம்.எஸ் நகர் விநாயகர் கோயிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோயில் நிர்வாகத்தினர், குறைந்த எண்ணிக்கையிலான உள்ளூர் பக்தர்கள் பங்கேற்பில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது. 

இதில் மாப்பிள்ளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். 
வெள்ளக்கோவில் நகரில் ஆங்காங்கே மக்கள் தத்தமது வீடுகளில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் கொத்துகள் கட்டி, விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →