முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 24 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 23,989 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 23,989 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 23,989 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,15,948 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 10,988 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,47,974 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,967 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தனிமையில் இருப்பவர்களை உள்ளடக்கி 1,31,007 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 8,978
  • செங்கல்பட்டு - 2,854
  • கோவை - 1,732
  • திருவள்ளூர் - 1,478

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.