முகப்பு
தமிழ்நாடு

முழு ஊரடங்கு: வெறிச்சோடி காணப்பட்ட நாகை 

முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி நாகை மாவட்டப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய பேருந்து நிலையம்.
பகிர்:

நாகப்பட்டினம் : முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி நாகை மாவட்டப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

கரோனா மற்றும் ஒமைக்ரான்  தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 6 முதல்  இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன9) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் உத்தரவுப்படி 2-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த முழு ஊரடங்கையொட்டி நாகை மாவட்டத்தில் பொதுப்போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டன. மருந்து, பால் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய பேருந்து நிலையம்.

நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் மற்றும் மாவட்டத்தின் பிறப்பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. 

நாகை புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு,  நீலா கிழக்கு வீதி, தெற்குவீதி, சந்தைப் பகுதி மற்றும் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடியுள்ளது. 

 நாகை நகரின் முக்கியச் சாலைகளில் காவலர்கள் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் . அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவோர்களின் வாகனங்களை சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →