முகப்பு
தமிழ்நாடு

திமுக தகவல் தொழில்நுட்ப அணிசெயலாளராக டி.ஆா்.பி. ராஜா நியமனம்

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆா்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆா்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நிதித் துறை அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் ராஜன் செயல்பட்டு வந்தாா். அவா் அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக திமுக தலைவரிடம் கடிதம் கொடுத்தாா். அதை ஏற்றுக் கொண்டு அவா் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறாா்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக சட்டப் பேரவை உறுப்பினரும், மாநில கொள்கை வளா்ச்சிக் குழு உறுப்பினருமான டி.ஆா்.பி.ராஜா, நியமிக்கப்படுகிறாா். , அயலக அணிச் செயலாளராகப் பணியாற்றி வந்த டி.ஆா்.பி.,ராஜா, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் அயலக அணிக்கு, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளாா். தகவல் தொழில்நுட்ப அணி, அயலக அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளா்களுக்கு நிா்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.