முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு 8ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு 8ஆவது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

பேரறிவாளனுக்கு 8ஆவது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. 
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் சுமாா் 30 ஆண்டுகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா். சிறுநீரகத் தொற்று வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக, பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி, அவரது தாயாா் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினாா். 

இதை பரிசீலித்த முதல்வா் 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டாா். அதனடிப்படையில், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி பரோலில் ஜோலாா்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் வந்தாா். மருத்துவா்களின் ஆலோசனைப்படி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூா் உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தாா். 
இதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், அவருக்கு 7 முறை தமிழக அரசு பரோல் வழங்கியது. இதனிடையே, பேரறிவாளனின் பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பேரறிவாளனுக்கு 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.