தமிழ்நாடு

கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது

DIN

கோவை மதுக்கரை அடுத்த சுகுணாபுரத்தில் குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் நேற்று இரவு சிக்கிய நிலையில், இன்று டாப்சிலிப் அடர்ந்த வனத்தில் விடப்பட்டது.

கடந்த 17ஆம் தேதி கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் அடுத்த பி கே புதூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சிறுத்தை பதுங்கியது.  இதனையடுத்து வனத்துறையினர் அந்த குடோன் மேல்புறம் வலையை விரித்து முன்பக்கம் ஒரு கூண்டு பின்பக்கம் ஒரு கூண்டு வைத்தனர் . இந்தநிலையில்,  அந்த சிறுத்தை கூண்டுக்குள் வராமலே போக்குக் காட்டி வந்தது. 

அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட சிறுத்தை

வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். தனிப்படை அமைக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு கேமிரா மூலம்  கண்காணித்து வந்தனர். இதை அடுத்து நேற்று (21-1-22)  நள்ளிரவில்  சிறுத்தை  கூண்டுக்குள்  சிக்கியது.  மேலும் ஜேசிபி  இயந்திரம் கொண்டு அந்த கூண்டு வெளியே எடுத்து சிறுத்தையின் ஆரோக்கியத்தை மருத்துவர் குழு ஆராய்ந்த  பின்னர்  கோவை வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிறுத்தை கூண்டில் சிக்கியது அந்த பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்தது. மேலும், இந்த சிறுத்தை பிடிக்கும் பணியில் 50கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிடிப்பட்ட சிறுத்தை உணவு அருந்தாததால், சோர்வுடன் இருக்கின்றது. ஆனால் ஆரோக்கியமாக இருந்தது. அதற்கு வனத்துறையினர் உணவுகள் வழங்கிய பிறகு ஆனைமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனத்தில் சிறுத்தை விடப்பட்டது.

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT