முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 30,055 பேருக்கு கரோனா; 48 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,055 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 48 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 25 ஜனவரி, 2022 at 8:00 PM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,055 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 48 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 30,215 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 30,055 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31,94,260-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

ஒரு நாளில் மட்டும் 48 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 37,312-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 24,639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை  29,20,457-ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும் 2,06,484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 20.0%-ஆக உள்ளது.

சென்னையில் 6,241 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.