முகப்பு
தமிழ்நாடு

நாளை தமிழ்நாடு வருகிறார் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் ஆதரவுகோரி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு நாளை சென்னை வருகிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
திரெளபதி முர்மு
பகிர்:

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் ஆதரவுகோரி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு நாளை சென்னை வருகிறார். 

நடைபெற உள்ள குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆதரவு கோரி அரசியல் கட்சியினரை சந்தித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் கோரிக்கை விடுப்பதற்காக திரௌபதி முா்மு நாளை (ஜூலை 2) சென்னை வருகிறார்.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை அவர் ஆதரவு கோர உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →