வேலூர்: பைக் மட்டுமல்ல, ஜீப் மீதும் போடப்பட்ட சாலை
வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலேயே ஓரிரு நாள்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை போடப்பட்டது.
வேலூர்: வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலேயே ஓரிரு நாள்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை போடப்பட்டது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, அதே வேலூரில் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்ததன்பேரில், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து சாலை சீர் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கம்பம்: இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.