முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

சென்னை: ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வித் துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

கலந்தாய்வு வரும் ஜூலை 11 முதல் 15 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 11-ம் தேதி நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெறும்.

அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 14, 15ஆம் தேதிகளிலும் நடைபெறும்  என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த கலந்தாய்வு இணைய வழியாக நடைபெறும் என்று குறிப்பிப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →