சென்னை மாநகராட்சி பேருந்துகளில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகரான சென்னையிலும் தொற்று கண்டறியப்படும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் ஆகியோரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
திருமண மண்டபம், வழிபாட்டு தளங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.