தமிழ்நாடு

திருவோணமங்கலம் ஞானபுரி ஆக்ஞா கணபதி, ஸ்ரீ ராம பாதுகா சன்னதி கும்பாபிஷேகம்: பக்தர்கள் சாமி தரிசனம் 

DIN

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம்  ஞானபுரி ஆஞ்சனேயர் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீ ராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் மகாசுவாமிகளின் திருக்கரங்களால் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி அஞ்சனேய சுவாமி கோயில். இக்கோயிலில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

ஆஞ்சனேயர் சுவாமிக்கு அருகே ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், ஸ்ரீகோதண்டராமர் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீ ராம பாதுகா சன்னதிகளின்  மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு மேல் பத்து முப்பது மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது.  

கும்பாபிஷேகத்தை ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த சுவாமிகள் தனது திருக்கரங்களால் நடத்தி வைத்தார். 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக  பூர்வாங்க பூஜைகளும் , யாகசாலை பூஜைகளும் நடந்தது.

33 அடி உயர ஆஞ்சநேயர்.

கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மாதிகாரி ரமணி அண்ணா,  திருமடத்தின் ஸ்ரீகாரியம்  சந்திரமௌலீஸ்வரர் மற்றும் திருவோணமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT