கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொடர்மழை: நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிக்கு இன்று புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிக்கு இன்று புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிா் நிலவுகிறது.

தொடா் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளிலும் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இதனால் நீா்மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை(ஜூலை 13) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT