பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர். 
தமிழ்நாடு

பில்லூர் அணை 97 அடியை எட்டியது... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

DIN

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது. இதனால் அணையின் மொத்த நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

இதனால் பவானியாற்றின் கரையோரப் பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை,வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை,வெள்ளிப்பாளையம், உள்ளிட்ட ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வட்டாச்சியர் மாலதி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பவானியாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT