சென்னை: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதால், கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தந்தை செய்த மேல்முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடல் கூறாய்வின்போது, தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதால், மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தந்தை ராமலிங்கம் தரப்பு முறையீடு செய்தது.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
ஆனால், மறு உடல் கூறாய்வுக்கு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதி சதீஷ்குமார் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும், வேண்டுமானால் சிபிசிஐடிக்கு மனு அளியுங்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மாணவியின் உடலை மறு உடல் கூறாய்வு செய்யவும், அப்போது, தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், தந்தையின் தரப்பில் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. எனவே, இந்த உத்தரவில் தங்களுக்கு நிறைவு இல்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமலிங்கம் தரப்பில் முறையிட, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, வேண்டுமானால் சிபிசிஐடிக்கு மனு அளிக்கலாம் என்று நீதிபதி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.