தமிழ்நாடு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

DIN

சென்னை தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

கடந்த ஜூல் 12 ஆம் தேதி தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

கரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்காக  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. 

மேலும், வெள்ளிக்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலின் குணமடைந்து வருவதாகவும் இன்னும் சில நாள்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, மருத்துவமனையில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் சென்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு முதல்வர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் பலன்தராத போக்குவரத்து வாரவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடரும் விதிமீறல்; கண்டுகொள்ளுமா காவல்துறை?

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா்: நகா்மன்றத் தலைவரிடம் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT